Wednesday, April 4, 2007

நானும் ஒரு பேய்தான்


நானும் ஒரு பேய்தான்,
குணம் கெடுத்து மகிழ்வேன் நான்,
என் பெயரோ லஞ்சம்
பலர் என்னிடம் தஞ்சம்
சுதந்திரம் பின் பிறந்த நான்
வளர்ந்து விட்டேன் பூதமாய்,
சின்னப் பொருளும் வாங்குவேன்,
கருப்புப் பெட்டியும் முழுங்குவேன்,
போலீஸும் அடைக்கலம் என்னிடம்
தலைவர்களுக்கும் நான் ஒரு புகலிடம்
என்னால் முடியாதது ஒன்றுமில்லை,
நான் சாதிக்காதது இல்லவுமில்லை,
சுமார் படிப்பிற்கு கல்லூரித் தேர்வு,
நாற்காலியில் ஏற்றி மந்திரிக்கு உயர்வு
கொலை செய்தவன் மகிழ்ச்சியுடன் வெளியே,
வக்கீலும் என்வசம், புழுங்குவார் தனியே,
ஆபீஸில், சோம்பேறிக்குப் பதவி,
கொள்கை விட்ட மனிதனுக்கு உதவி
கீழ்மட்டத்திலிருந்து மேலவரை நான்,
எத்திசையிலும் நான்.,எத்தொழிலிலும் நான்.,

"நீ இல்லை என்றால் வாழ்க்கையில்லை"
என்று ஒத்துக்கொண்ட மக்கள் என் வலையில்
நற்பண்பு என்ற மந்திரமாம் என்னை ஓட்ட,
அது போதும், மிக எளிது, என்னை விரட்ட
ஹா..ஹா! என் பெயர் லஞ்சம்!
மக்கள் என்னிடம் தஞ்சம்...
அன்புடன் விசாலம்

No comments: