Sunday, April 1, 2007

செல்லக்குழந்தைப் பேசுகிறாள்




உங்கள் எல்லோருக்கும் வணக்கம்!
நான் சின்ன பொண்ணு பேசறேன் ஏன் தெரியுமா? நவம்பர் 14 எங்கள் தினம். புரிலையா? அதான் 'குழந்தைகள் தினம்'. இன்னிக்கி எங்களுக்கு ரொம்ப மஜாதான். என்ன மஜா னு கேட்கறீங்களா? வந்து...வந்து...எங்க ஸ்கூல்லே பிஸ்கெட், சாக்கலேட்டு தருவா, எங்க மிஸ், எங்கம்மா ரொம்ப நல்ல அம்மா, எங்கம்மா சொன்னா, வந்து...வந்து, இன்னிக்கி சாச்சா நேஹ்ரு பிறந்த நாளாம், எங்கம்மா சொல்றா அவருக்கு குழந்தைகள்னா ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். அவர் சட்டேல எப்போதும் ரோஜாப்பூ வச்சுப்பாராம் அவர் சொல்வாரம் நாங்கள்லாம் தோட்டத்தில் வளரும் அழகான மொட்டுக்கள்னு. அப்புறம்...வந்து... வந்து...

நாங்கல்ல்லாம் இப்ப குழந்தைகள்தானாம் ,,,ஆனாக்க பின்னாலே வரப் போற சிடிசனாம் அம்மா சொன்னா ....,, ஆமாம் சிடிசன்னா என்ன? இன்னும் என்ன சொன்னா எங்கம்மா ,,,,,, மறந்துப்போச்சே ஹா ஞாபகம் வந்திடுச்சு குழந்தைகள் தான் இந்தியாவை இன்னும் சிறப்பாக்கற அஸ்திவாரமாம், நான் சின்னவ அதனாலே நான் அவரைப் பாத்ததில்லை. அம்மா போட்டோ காட்டினா நல்ல வெள்ளைத்தொப்பியோடசிரிச்சிண்டு சட்டைலே ரோஜா சொருகிண்டு ஜம்னு இருந்தார், குழந்தைகள்னா அணைச்சு சிரிச்சு பேசி மகிழ்வராம் , அதான் அவர் பிறந்த நாள் குழந்தை தினமா கொண்டாடறா,,,,, எனக்கு எங்கம்மா ஔவையார் படம் போட்டுக் காட்டுவா நான் சூப்பர் ஸ்டாரும் பாப்பேன்னு சொன்னேன் சரி ராகவேந்திரா படம் காட்றன்னு சொல்லிருக்கா சாயங்காலமா மேலா அழைசிண்டு போவாளே ஹாய் ஜாலி அங்கு ராட்டினம் சுத்துவேன். நிறைய விளையாட்டு இருக்கும் ஆனா அங்கிள்...ஓ ஸாரி! எங்கம்மா அங்கிள் ஆண்டி, மம்மி டேடி எல்லாம் கூப்பிடாதே அழகாக தமிழில் கூப்பிடுன்னு சொல்லுவா.

பின் என்ன கூப்படறது மாமான்னு கூப்பிடவா? நான் ஒண்ணு கேக்கறேன் எங்களுக்குன்னு ஒரு நல்ல டிவி சேனலாரம்பிச்சு அதிலே எங்கம்மா கதை சொல்லுவதுபோல அரிச்சந்திரன் ராமதாஸ் சிவாஜி கட்டபொம்மன் தேசத்தலைவர்கள் எல்லாம் அனிமேஷன் போல செஞ்சு காட்டுங்களேன் ஆஆ சொல்ல மறந்துட்டேனே எங்கிட்ட ஹனுமான் அனிமேஷன் படம் இருக்கே..! எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயோ..!வளவளனு பேசிண்டே போறேன் இந்தக் குழந்தைகள் தினத்திலே எங்களை வாழ்த்துங்கோ பார்க்கலாம்..! சரி என் பேரு சொல்லையே! நான் தான் விசாலம் 4ஆங் கிளாஸ்...


பின் குறிப்பு:குழந்தையாக மாற ஆசை ஆகயால் இந்தக் குழந்தைகள் தினத்தில் கற்பனைக் குழந்தையாக மாறி என் ஆசையைத் தீர்த்துக் கொண்டேன் அப்பா! எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது


.........அன்புடன் விசாலம்

No comments: