உயர்திரு ஸ்ரீனிவாசவரதன் என்பவரின் மனைவி திருமதி பத்மாசினி. கணவருக்குத் தோளுக்குத் தோளாய் நின்று தேச பக்தியை பரப்பினவர். வந்தேமாதரம் என்ற முழக்கத்திற்கு, பல அடிகள் கிடைத்தக் காலம், பெண்களும் பயந்து அடிமையாக இருந்த போது இவரிதை ஒழிக்க
முன்னுக்கு வந்தார். பெண்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்தி சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் களத்தில் இறங்கியவர்.பெரிய தியாகிகளைப் பற்றியும் மஹாத்மா காந்திஜியைப் பற்றியும் நிறைய எடுத்து
உரைத்தார். மதுரை பூந்தோட்டப் பகுதியில் "திலகர் ஆஸ்ரமம்"
அமைத்து அங்கு மக்களை கூட்டி சுத்ந்திரப் பொறியை வளர்த்தார்.
தன் கணவர் சுதந்திரப் போரில் சிறைக்குச் சென்றவுடனிவர் கணவரை அங்கு போய் பார்த்து நெற்றியில் வீரத்திலகமிட்டு வாழ்த்துச் சொன்னார்.
தான் சாப்பிடும் நேரம் கூட எடுத்துக் கொள்ளாமல் தனியாக தேச பக்தி பணியில் ஈடுபட்டு பெண்மணிகளைச் சேகரித்தாள். கதர் உடுத்தும்படி அறிவுறுத்தி இராட்டினம் நூக்கவும் கற்றுக் கொடுத்தாள். தன் உடல் நிலையை மறந்தாள் அவளுடைய இரண்டு குழந்தையும் பிறந்து
இறந்து போயின, இருப்பினும் தேசத் தொண்டைக் கைவிடவில்லை, திரு.சுப்பிரமண்ய சிவா அவருக்கு மிகவும் வேண்டிய குடும்ப நண்பர் மூன்றாவது முறையும் அவர் கர்பிணியாக இருந்தும் வேலையைத் தொடர்ந்து செய்யும் போது ஒரு பெண் சிசு பிறந்து இறந்து போனது ஆனாலும் மனம் தளரவில்லை. "சகோதரிகள் சங்கம்" உருவாக்கி இராட்டினம் நூற்கத் தொடங்கினர். ஒரு சமயம் தான் அணிந்திருக்கும் நகைகளைக் கழட்டிக் கொடுத்து தேசபக்தர்களின் சிலவுக்குக் கொடுத்துவிட்டார்.
அநியாயத்திற்கு குரல் எழுப்பி 6 மாதம் சிறைத் தண்டனையும் அனுபவித்தார். அங்கு அவர் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தக் காரணத்தினால் உடல் நிலை மிகவும் மோசமானது. தன் குழந்தைகளெல்லாம் வரிசையாகப்
பறிகொடுத்த பின்னும் தொடர்ந்து உழைத்தார். சுதந்திரமே அவர் மூச்சாக இருந்தது.
தன்னிடம் இருந்த பத்து ஏக்கர் நிலத்தையும் "பாரதி ஆசிரமம்" அமைக்க நன்கொடையாகக் கொடுத்துவிட்டார். தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு பள்ளி அமைத்து கல்வி அறிவை வளர்த்தார். தேச பக்தி, அயராத உழைப்பு தேச
விடுதலையே மூச்சு, என்பவரின் மூச்சும அவருடைய 49 வயதில் நின்றுவிட்டது. அவரை நாம் இன்றாவது
ஞாபகப் படுத்திக்கொள்ளலாமே; அவள் வளர்தத பூங்கா வாடிவிட்டது அந்தப் பூக்கள் எங்கே? பத்மாசினி அம்மையார் சுதந்திரக் காற்றுடன் கலந்துவிட்டார்
விசாலம்
Monday, April 2, 2007
இவர் எங்கே மறைந்து போனார்?
Posted by
Meerambikai
at
5:20 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment