Wednesday, April 4, 2007

அன்னைக்கு சமர்ப்பணம்




அன்னைக்கு சமர்ப்பணம்..!
அன்னை சித்தி அடைந்த தினம் நவம்பர் - 17.


பாண்டிச்சேரியாம் பெருநகரின்...கடலருகில்
மாதேவி எங்கள் அன்னையாம் வீற்றிருக்க,
அற்புதங்கள் பலப்பல நிகழ்த்திக் கொடுக்க,
ஓங்காரம் என்ற ரீங்கார நாதம் உணர்த்த,
மலருடன் பேசி அம்மொழியை அறிந்து,
மலர்களுக்குள்ளே மலர்ந்து அன்பு மலர
நடக்க முடியாததும் நடத்திக் கொடுக்க,
சத்தியம், ஒழுங்கு, சுத்தம், ஏற்று
அழகொளிரும், அருள் நிறையும் சமாதியில் செல்ல,
நெஞ்சுருகி, மனம் நெகிழ்ந்து அவளைத் தொழவே
கேட்டது கிடைக்கும், திருவருள் பெருகும்
பொல்லாத பாவங்கள் கரைந்தும் போகும்
தெள்ளிய ஞானமும் அரு புகழும் அடையும்
அள்ள அள்ள குறையாத திருவருள் கிட்டும்
ஆனந்தமயீ சைத்தன்யமயீ சத்யமயீ பரமே...


அன்புடன் விசாலம்

No comments: