Wednesday, April 4, 2007

ரம்ஜான் திருநாள்



முஸ்லிம்களின் நோம்பான ரம்சான் தற்போது முடியும் கட்டத்தை எட்டி இருக்கிறது அவர்கள் எங்கு இருந்தாலும் தங்கள் பிரார்த்தனையை சிறப்பாகவும் சிரத்தையாகவும் செய்வது மிகவும் போற்றத்தக்குறியது. பிரயாணத்தின் நடுவிலே ஒரு முஸ்லிம் அன்பர் தன் இருக்கையை விட்டு எழுந்திருந்து கீழே

வஜ்ராசனம் போல் அமர்ந்து தன் நமாஸ் பிரார்த்தனையைச் செய்ய ஆரம்பித்தார் அவருடன் பேச்சுக் கொடுத்தேன் அவர் ஒரு நாளைக்கு 5 தடவை செய்வதாகக் கூறினார். அவரின் பக்தியையும் சிரத்தையையும் கண்டு வியந்தேன் எந்த மதமானாலும் என்ன? உள்ளே இருக்கும் ஒளியைக் கண்டுக் கொள்வது தான் முடிவாக இருக்கும்.

இந்த நல்ல சமயத்தில் நான் ஹைதராபாத்தில் இருப்பது அந்த நோம்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிந்தது. இது அல்லாவுக்கு நன்றி தெரிவிக்கும் மாதம். தங்களுக்கு நலமும் சுபீட்சமும் கொடுத்து வரும் அல்லாவுக்கு அவர்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்கள். இதை நூற்பது தங்கள் முக்கியமான கடமையாக கருதுகிறார்கள். தங்கள் இயந்திரியங்களைக் கட்டுப் படுத்திக் கொள்கிறார்கள்.

நாக்கில் தண்ணீர் கூடப் படுவதிலை, காலை சூரியன் உதிப்பதற்குள் நோம்பு ஆரம்பமாகிவிடும் மாலை ஆதவன் மறைந்தபின் நோம்பு முடியும். இதைச் சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை நூற்கின்றனர்.

இதன் உபயோகங்கள்... ஏழைகளின் கஷ்டமும் பசியும் நேருக்கு நேராக அனுபவித்து பார்த்து அவர்கள்படும் துன்பத்தை அளக்க முடிகிறது.
சரீரத்தை சுத்தப் படுத்துகிறது மனதை ஒருமுகப் படுத்துகிறது.
மனம் இங்கேயும் அங்கேயும் சிதறவிடாமல் அல்லாவினிடமே ஒன்றி
போகிறது

எனக்கு பொருட்கள் வாங்குவதில் அவ்வளவு மோகம் இல்லாததால்
ஒரு கடையின் வாசலில் நின்றிருந்தேன் அங்கு ஒரு முஸ்லிம்
பெண்மணி
யாரையோ எதிர்பார்த்து நின்றிருந்தாள். அவளைப் பார்த்து
புன்னகைத்தேன்.
அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள் அப்போது நான் அவளிடம்

கேட்டேன்:பெரிய பந்தல் போட்டு ஹலீம் என்று எழுதியிருக்கிறதே அது என்ன?
அவள் சொன்னாள்:ரோசா எனற நோம்பு முடிந்தவுடன் நேராக மஸ்ஜித் போய் நாமாஜ் படித்து பின் பேரிச்சம் பழங்கள் மற்றும் பல பழங்கள் தின்கிறனர்.
அது முடிந்தபின் அவர்கள் போவது ஹலீம் தயாரிக்கும் இடம் தான்
ஹைத்ரபாதி ஸ்பெஷல் அது அருகில் இருந்ததால் நானும் அதுவரை நடந்தேன் ஆனால் அங்கு போன பின் தான் என் நிலமை எனக்கு புரிந்தது.
என் மூச்சு பயிற்சி எனக்கு கை கொடுத்தது. அவள் எதிரில் என் மூக்கைப் பிடித்துக்கொள்ளவோ அல்லது கர்சீப்பினால் மூடிக்கொள்ளவோ முடியவில்லை. பிறர் மனதைப் புண்படுத்தக் கூடாது என்ற கொள்கையில் நான் மிகவும் கவனமாக இருப்பேன், ஆகையால் என் மூச்சை ஒரு நிமிடம் நிறுத்தி நிறுத்திப் பேசினேன் .

இப்போது எல்லோரும் மிகவும் ரசித்து சாப்பிடும் ஹலீம் என்பதைப்
பார்க்கலாம், கீமா,,மாமிசத்தை நன்றாக வேக வைத்து அதனுடன் கரம்
மசாலா மற்ற உறைப்பு கலவைகள் சேர்த்து பின் நிறைய நெய் விட்டு
கோதுமை மாவும் சேர்த்து கிளறி {திருநெல்வேலி அல்வா போல் இருக்கும் என் நினைக்கிறேன் } வேண்டுமென்றால் சிக்கனும் சேர்த்து வெண்ணெய் போட்டு தருகிறார்களாம் french ல் gournet {கூர்மே } என்று சொல்வார்கள்.

அதாவது மிகவும் நாக்கு ஊறும் delicacy யாம் தவிர கஞ்சியும் செய்து
குடிக்கின்றனர் பாசிப்பருப்பு, அரிசி, தேங்காய்பால், காய்கறிகள், கீரை முதலியவைகள் சேர்த்து, செய்கின்றனர் எனக்கு இவைகளப் பற்றி சொன்ன சலீமாவுக்கு நன்றி தெரிவித்தேன். எல்லா முஸ்லிம் அன்பர்களுக்கும்
ரம்சான் வாழ்த்துக்கள்..!

லா இலாஹா இலல்லாஹ்

லா ஹௌலா வாலா கௌவித அல் அசீம்

அல் ஹம்துலில்லா

பிஸ்மில்லா ரஹ்மான் ரஹீம்

there is no other power or glory but in god Thanks to god

in the name of god the benifient ,,the merciful ,,,,,,there is no god except God

No comments: