Sunday, April 1, 2007

குருடன் யார்?



நல்ல பாதை என்று நுழைந்தேன்
பாதை தவறியது,
இருளில் நடந்தேன்,
நடந்து...நடந்து களைத்தேன்,
போகும் இடம் எது?
எந்த திசையில் போகிறேன் ?
கால்கள் தடுமாறின,
நம்பிக்கை ஒளிந்தது,
எதிரிலே முட்டிக் கொண்டேன்
"எங்கே போகணும்?"
ஒரு அன்புக் குரல்
என்னை அழைத்தது
போகும் இடம் சொன்னேன்,
ஒரு கம்பை நீட்டியது,
இறுக்கிப் பிடித்தேன் அதை
அவன் துணையில் நான்
அவ்ன முன்னேறினான்
ஒரு தடங்கலில்லை
ஒரு இடைஞ்சலில்லை
ஒன்றிலும் மோதவில்லை
இருள் போனது
ஒளி தெரிந்தது
"போய் வாங்கோ"
"இனி வெளிச்சந்தான்"
அன்பு குரல்
விடை பெற்றது.
நிமிர்ந்து பார்த்தேன்
பிரமித்துப் போனேன்
கண்ணிருந்தும் நான்
குருடனானேன்
கண்ணில்லாதவன்
எனக்கு வழிக்காட்டி
அவன்மனக் கண் ஒளி
எனக்கும் ஒளி,
அவன் அன்பில்
என் பாதை சீர் ஆனது
நல்ல கண்கள் இருந்தும்
நானல்லவா குருடன்
நம்பிக்கை இழந்து
பாதையை மறந்தேனே

விசாலம்

No comments: