Sunday, April 1, 2007

ஆசிரியர் தினம்



ஆசிரியர் தினம்!
எனக்கு மிகவும் பிடித்த தினம் அன்று எங்களுக்கு பாடம் எடுக்கும் வேலையில்லை.
மணவர்களுக்குள்ளேயே "ஒரு நாள் ராஜா" கதை போல் தலைமை ஆசிரியை யிலிருந்து கடைசி ப்யூன் வரை
அவர்களே பொறுக்கி அன்று அவர்களே பள்ளி நடத்தி பின் எல்லா ஆசிரியர்களுக்கும் ஒரு சின்ன பரிசும்
தருவார்கள். இது தில்லியில் நடக்கும். சென்னையைப் பற்றி இனிமேல் தான் அறிய வேண்டும்.
தவிர இனிப்பும் வழங்குவார்கள். சின்ன பெண்கள் புடவையுடன் ஆசிரியை போல் வந்து பாடம் எடுப்பது
வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கும். சில டீச்சர் போல் செய்கைசெய்து வேடிக்கை செய்வதும் உண்டு.
"குருசரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்சாராத் விசாராத் பவ முக்த:
ஸேந்த்ரிய மானஸ நியமாதேவம்
த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்த்வம் தேவம் :"
குருவே நீங்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் எங்களுக்கும் எங்கள் மனதில் இருக்கும் இறை
சக்தியை மனதார காட்டுங்கள் மாணவரான நாங்கள் நல்ல நம்பிக்கையுடனும் குரு பக்தியுடனும் எங்கள்
வாழ்க்கைப் பாதையை சீர் செய்து குருவின் பெயரைப் பிரகாசிக்க செய்துநல்ல பண்புடன்வாழ சபதம் எடுத்துக் கொள்கிறோம்
செப்டம்பர் 5 டாக்டர் சர்வபள்ளி திரு ராதாகிருஷ்ணரின் பிறந்த நாள் அவர் 1888ல் திருத்தணியில்
பிறந்தார், அவர் மேல் மிகுந்த பாசம் வைத்த மாணவர்கள் அன்பர்களவரின் பிறந்த நாளைக் கொண்டாட
அனுமதி கேட்டனர், அவர் சொன்னார்
"என் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு பதிலாக நாடு முழுவதும்
ஆசிரியர் தினமாக கொண்டாடுங்கள்" என்றார். ஆசிரிய தொழில் மேல் அவர் எவ்வளவு மரியாதை வைத்திருந்ததார் என்று இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் ஒரு உதாரண புருஷராக விளங்க வேண்டும். அவருடைய கல்வி புகட்டும் திறமை ஒருவர் மனதைப் போய் தொடவேண்டும். மரியாதைக் கொடுத்து மரியாதை பெற வேண்டும்.
"To sir with love" படம் பார்த்தால் ஒரு ஆசிரியருடன் மாணவர்கள் நடபின் பாலம் புரியும்.
ஸாக்ரெடிஸ் ஒரு சிறந்த ஆசிரியர். அவர் ஆசிரியாராக இருந்து கொண்டே பல பாடங்கள் கற்றும்
வந்தார் அவர் சொல்கிறார் "ஆசிரியர் நண்பனுக்கு நண்பனாய், ஆசிரியராய் இருத்தல் வேண்டும்.அன்பை அள்ளித் தந்து பாடம் நடத்த வேண்டும்."
ஆசிரியர்களே உங்களுக்கு ஒரு கவிதை.
"ஆசிரியரே நீ மெழுகுவர்த்தி
கறைந்து போகிறாய் -ஆனால்
ஒளியைத்தருகிறாய்
நீ ஒரு நல்ல ஆசான்
ஆனால் சர்வாதிகாரி அல்ல,
மாணவர்கள் மனது ஒரு கண்ணாடி
அது உடையாமல் ஒளிரட்டும்
அன்பு பாசம் பொழிந்துவிடு
மதிப்பை தன்னால் வாங்கி விடு
அவனும் உன்னை மதிக்கட்டும்
நல்ல பெயர் எடுக்கட்டும்
பண்பு நிறைந்த குணமே சிறந்த கல்வி
அது வளர சிறந்த விதையைப் பதித்து விடு
மாணவர்களின் உயர்வு உன் பெருமை!
உலகெல்லாம் பரவட்டும் உன் அருமை
ஓரு நட்பு பாலம் அமையட்டும்
குருவின் பக்தி வளரட்டும்
அன்பெனும் தீபம் எரியட்டும்
இதயத்துள்ளும் ஒளி பரவட்டும்
என் குருவின் ஆசிகள் எனக்கு கிடைக்கட்டும்
வாழ்க ஆசிரியர்கள்!"

No comments: