Sunday, April 1, 2007

பாரதியார் நினைவு நாள்



அன்று செப்டம்பர்-11,

பத்து வருடங்களுக்கு முன்…

என் மனம் பின்னோக்கி போயிற்று

நம் பாரதியைப் பற்றி ஹிந்தி பேசும் மக்களுக்கும் தெரிய வேண்டும் என்று எண்ணம் ஓங்க...
பள்ளியில்... ஒரு போட்டியும் மேடையில் கொண்டாடவும் ஏற்பாடு செய்தேன்.

மாணவிகளுக்கு
"வாழிய செந்தமிழ்" கற்றுக் கொடுத்தேன். நம் தமிழ் மொழியில் இருக்கும் 'ழ' என்ற சிறப்பு

எழுத்து பஞ்சாபிகளுக்கு தலைகீழ் நின்றாலும் சொல்ல வரவில்லை. அவர்கள் பாடியது
"வாலிய செந்தமில் வாலுக நற்தமிலர் "
எனக்கு சிரிப்பு வந்தாலும் மனம் ஒன்றி கற்றுக்கொண்டு பாடியதுக்கு சபாஷ் தெரிவித்தேன்.

பின் நடந்தது கோலாட்டம், அந்தப்பாட்டும் பாரதியின் புகழ் பற்றித்தான்

"பாரதியார் பாட்டைக் கொஞ்சம் படித்துபாரடி ‘
பாடினாலே தேன் ஊறும் குடித்து பாரடி
கண்ணன் பல தோற்றத்துடன் வ்ந்து போனானே
பாரதத்தாய் கொடிபிடித்து ஆசி தந்தாளே{பாரதியார்}
பத்தினியார் பாஞ்சாலி சபதமே,
படித்தாலே நெஞ்செல்லாம் உருகுதே!
பக்திப் பாட்டு, சக்திப்பாட்டு, குயில்பாட்டு பாடப்பாட,
உள்ளத்திலே ஒரு ஒளி வீசுதே, சக்திப்பிறக்குதே :{பாரதியார்}


பாரதி... முப்பத்தொன்பதுஆண்டு காலம் தான் வாழ்ந்தார்.

அதற்குள் அவர் இயற்றிய கவிதைகள் உயிர் பெற்று உலக முழுவதும் பேரிகைக் கொட்டத் தொடங்கியது.
தனக்கு வயது குறைவுதான் என்பதால் தானோஇவ்வள்வு பெரிய படைப்புக்களை இந்த குறுகிய காலத்தில் படைத்து விட்டார்.
1882ல் எட்டயபுரத்தில் பிறந்த அவர், சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தார்.
அவர் படைப்புக்களை வள்ளுவர் கம்பர் இளங்கோவடிகளுடன் ஒப்பிடலாம். தமிழுக்கே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
பல மொழிகளில் வல்லவர். பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி,கட்ச்ச், ஆங்கிலம், தமிழ் எல்லாவற்றிலும் நிபுணர். அவர் தமிழைப் பற்றி பாடுகிறார்


"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"
பின்னர்

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே"
அவர் ஹிந்துவானாலும் எல்லா மதமும் சம்மதமே
என்றபடி அல்லா. ஜீஸஸ் கண்ணன் என்று எல்லோர் மேலும் கவிதை புனைந்துள்ளார்.
இரண்டு ஜாதிகளைத்தவிர வேறு ஜாதி இல்லை என்று
"ஜாதி மதங்களைப் பாரோம்! உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தியராயின்
வேதியராயினும் ஒன்றே! அன்றி வேறு குலத்தவராயினும் ஒன்றே"
பாடுகிறார். அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு
திலக், காந்திஜி, லாலா லஜபத்ராய், வ..உ சி,
அரவிந்தர் மேலும் கவிதை புனைந்துள்ளார்.
அவர் இந்தியாவை பெரிய சக்தியாகவும், ஆன்மீக சாம்ராஜ்யமாகவும் பார்த்தார்.
"பாருக்குள்ளே நல்ல நாடு ….என்ற பாட்டு பிறந்தது
பல பத்திரிக்கைகளுக்கு எடிட்டர் ஆகவும் இருந்திருக்கிறார்.

(உ-ம்) சுதேசமித்திரன் விஜயா
வந்தேமாதரம் ,பாலபாரதி,சூர்யோதயம் ,,
அவரைப் பற்றியும், அவர் கவிதகளைப் பற்றியும்
சொல்ல சொல்ல காமதேனு போல் பல நல்ல விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும் அந்த
தீர்க்கதரிசி ஞானி பகவத் கீதையைப் பற்றியும்
எழுதினார். பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு என்ற பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஆகையால் அவர் எழுதிய ஆத்திசூடியுடன் முடித்துக் கொள்கிறேன்

அச்சம் தவிர்!

ஆண்மைத்தவறேல்!
இளைத்தலிகழ்ச்சி.

ஈகைத்திறன்.
உடலினை உறுதி செய்!

ஊண்மிக விரும்பு!
எண்ணுவது உயர்வு

ஏறுபோல் நட!
ஐம்பொறியாட்சிக் கொள்!

ஒற்றுமை வலிமை!
ஓய்தலொழி!

ஔடதங் குறை!

கற்றதொழுகு!


பின் குறிப்பு : பாரதியாரின் பேரன் திரு ராஜ்குமார் எனக்கு மிகவும் பழக்கமானவரவரின் தாயார் லலிதா அவர்களுடன் பாரதியார் பற்றி பேசி இருக்கிறேன் அதை நான் சிற்ந்த பாக்கியமாக எண்ணுகிறேன்
பாரதியாரைப் பார்க்க முடியவில்லை ஆனாலும் அவரின் வம்சம் பழக்கமானது என் பாக்கியம்.

விசாலம்

1 comment:

Unknown said...

Super effort.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

Love this site. Book marking this