“முட்டாள் தினம்" ஏப்ரல் ஒன்று. இதைப் பார்த்தால் சென்னையில் அநேகமாக தினமும் இந்த நாட்கள் தான்। யாராவது ஒருவர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏமாறுபவர் இருக்க ஏமாற்றுபவர் பாடு ஜாலிதான். நான் புதிதாகச் சென்னை வந்தபோது ஒரு கலயாணம்
சென்றேன் இறங்கும் இடத்தில் நான் ஓட்டுனருக்கு ரூ.200 கொடுத்து ரூ110 எடுத்துக்கொண்டு,
மீதியைக் கொடுக்கச் சொன்னேன்। அவன் அருகில் இருக்கும் கடையில் மாத்தித் தருவதாகச் சொன்னவன் வரவே இல்லை.
நான் கலயாணப் பந்தல் வாசலில் கால் கடுக்க நின்று விட்டு பின் ஏமாந்து திரும்பினேன். இந்த ஏப்ரல் முட்டாளில் ஒரு நன்மை. நாம் எததனை ஏமாற்றம் வந்தாலும் அதைச் சிரித்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளப் பக்குவம் வருகிறது.
முகத்தில் அசடு வழிந்தாலும் ஒரு வழியாக வழிந்து விட்டுப் பின் சமாதானம் ஆகிறோம்.
என் பள்ளியில் இந்த ஏப்ரல் முட்டாள் தினத்தில் போலீஸ் வரும்படியாகி விட்டது. சில மாணவர்கள் ஒரு பந்து போல் சணலைச் சுற்றி ஒரு மைதானத்தின் செடிக்கு அருகில் ஒளித்து பயந்தாற்போல் நடித்து, பாம் என்று வதந்தி கிளப்பி ஓடி வந்தார்கள்। ஒரே பரபரப்பு போலீஸுக்கு சொல்லி அனுப்பி அவர்கள் வர சின்னக் குழந்தைகளைப் பொறுப்பாய் வீட்டிற்கு அனுப்ப,
பின் போலீஸ் டிடெக்டிவ் மெஷீனால் அதைப் பார்க்க பின் தைரியமாக அதைப் பிரிக்க சணல் நூல் த்ரௌபதி வஸ்திரம் போல் வந்து
கொண்டே இருந்து பின் கடைசியில் ஒரு துண்டு காகிதம் அதில் எழுதி இருந்தது.
ஏப்ரல் fool போதுமா? மனக் கஷ்டம் சமயம் வீண்.
டென்சன் பாதி நேரம் படிப்பு இல்லாமை,
இத்தனை கஷ்டம் கொடுத்து இந்த ஏமாற்று வேலை
வேண்டுமா? யோசிக்க வேண்டிய விஷயம்.
இது போல் பெரியக் கம்பெனியான " டேகோ பெல்" 1996 ல் தான் லிபர்ட்டி மணியை பல கோடி ரூபாய்களுக்கு
வாங்கி விட்டதாக அமெரிக்கன் டைம்ஸில் விளம்பரம் கொடுத்தது அதன் பெயரும் டேகோ லிபர்ட்டி பெல்.
என்று மாற்றி விட்டதாக அறிவித்தது மறு நாள் தெரிந்தது இது ஏப்ரல் fool என்று. இதே போல் டென்மார்க்கும் ‘டவர் ஆஃப் பீசா “பீசா கோபுரம் சாய்ந்து விட்டதாக டூப் விட்டது.
இந்த நாள் தான் முதன் முதலில் புது வருடம் ஆக
கொண்டாடப் பட்டு வந்தது. அதாவது மார்ச் கடைசி
வாரத்திலிருந்து ஏப்ரல் முதல் தேதி வரை கொண்டாட்டம்
இஷ்டப்படி அலங்காரம் ஹாஸ்யம் என்ற பெயரில்
கன்னாபின்னா பேச்சுக்கள் பரிமாறிக்கொள்வார்களாம்
இது "பீஸியன் ஜோடியக் ஸைன்" என்பதால் எல்லா தின் பண்டங்களும் சாக்லெட் கேக் போன்றவைகள் மீன்
வடிவில் ஆக்கி விற்பார்கள் பின் முதன் முதலில் பிரான்ஸ் தான் முதல் வருடம் ஜனவரி
ஒன்று என்று ஆக்கியது ஸ்காட்டில் இதை "கௌக்கி
"gowkie day என்றும் இங்கிலாந்தில் இதை நாட்டி டே
{noddy day “என்கின்றனர் அன்று அலைகள் புரளுவதுப்
போல் உடைகள் கீழே புரள முன்பு பெணகள் வலம்
வருவார்களாம்.
இங்கும் ஒரு புராணைக்கதை இருக்கிறது ரோமனின்
ஒரு பெண்தெய்வம் "ஸிரிலியா " தன் மகளின் எதிரொலியைக்
கேட்டு ப்ளூட்டோ உலகத்தில் நுழைந்ததாகப் பார்த்து
அந்த எதிரொலியை வைத்து அவளைக் கண்டுபிடிக்க
முயன்றும் முடியவில்லை. எதிரொலியில் கண்டு பிடிப்பது ஒரு முட்டாளான காரியம் என்று உணர்ந்து இதை முட்டாள் தினம் ஆக ஆக்கிவிட்டாளாம்
இது நம் நாட்டில் தேவதைக் கதைகள் போல் உள்ளது, வசந்த ருது வரும் கொண்ட்டாட்டமாக இதைக் கருதலாம் நம் ஹோலிப் பண்டிகைப்போல்...
ஆனால் இது மிக அவசியமான ஒன்று என்று
எண்ணத் தோணவில்லை எத்தனையோ ஆக்கப்
பூர்வமாக செய்ய வேலைகள் பல இருக்க இது தேவையா என்று தோன்றுகிறது.
அன்புடன் விசாலம்
Sunday, April 1, 2007
முட்டாள் தினம்
Posted by
Meerambikai
at
6:31 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment