என்ன வயது உனக்கு?
பதிமூன்று வயது பாலகனோ!
கல்வி கற்கும் வயதில்,
காப்பி ஆற்றி கொடுக்கிறாய்!
உண்டு களிக்கும் வயதில்
உணவாகக் கஞ்சி குடிக்கிறாய்,
ஆடி ஓடித்திரியும் வயதில்
ஆழ்ந்த சிந்தனையில் வாழ்கிறாய்,
பள்ளிக்கு போகும் வயதில்
பஜ்ஜி சுட்டுத் தருகிறாய்,
இன்ப கனவு காணும் வயதில்
இட்லி கொண்டு வைக்கிறாய்
"பாக்கெட் மணி" வாங்கும் வயதில்
டிப்ஸ் கிடக்குமா என்று ஏங்குகிறாய்.,
ஏனைய நண்பர்கள் விளையாட
ஏக்கத்துடன் பார்க்கிறாய்
பொறுப்பு வந்தது எதனாலோ?
நோயாளி அம்மாவைக் காப்பாற்றவா?
குடிகார அப்பனுக்கு காசு தரவா?
தம்பி தங்கையை மேல் தூக்கவா?
ஓட்டை வீட்டின் வாடகை தரவா?
தகப்பன் இருக்கும் போதே
நீ தகப்பன் ஆகிறாயே!
பொறுப்பில்லாத தகப்பன்
குழந்தை ஆகிறானே!
உன் உழைப்புக்கு பரிசு உண்டப்பா!
உன் கடமைக்கு அருளும் பொழியுமப்பா,
விசாலம்
Sunday, April 1, 2007
நீ தகப்பன் ஆகிறாய்!
Posted by
Meerambikai
at
4:56 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment