Sunday, April 1, 2007

வெளிநாட்டில் நம் இளைஞர்கள்

தற்கால இளைஞர்கள் இந்தியாவிலிருந்து வெளி நாட்டில் சென்று பின் திருமணம்
செய்து கொண்டு அங்கேயே குடும்பம் நடத்துகிறார்கள்.

அங்கு இருக்கும் பல பேர்களின் வீட்டிற்கு போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அவர்கள் நடத்தும் வாழ்க்கையை நான்
வாழ்த்திப் பாராட்டுகிறேன். கணவன், மனைவி
ஒருவர்க்கொருவர் புரிந்து கொண்டும்,விட்டுக்கொடுத்தும் வேலைகளின்
பளுவை சமமாகப் பிரித்து பகிர்ந்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
ஒருவர்கொருவரின் உணர்வை மதிக்கிறார்கள்.
நான் என் மகன் ராஜாவைப் பார்க்க லண்டன் போன போது நிறைய புது அனுபங்கள்ஏற்பட்டன. ஏர்போர்ட்டில் இற்ங்கியவுடன் என் மகன் என்னிடம் ஓடி வந்து அணைத்துக் கொண்டு கன்னத்தில்

ஒரு முத்தமும் கொடுத்தான். பின் என் மருமகளும்
அதே போல் செய்தாள் திரும்பி பார்த்தேன் அந்த நாட்டு கலாசாரப்படி எல்லோரும் தங்கள் அன்பை இதே போல் பறிமாறிக் கொண்டனர். சில வித்தியாசமான காட்சிகளும் இருந்தது. காரின் அருகில் செல்ல என் மருமகள் தான் ஓட்டும் இடத்தில் அமர்ந்துகொண்டு,
"உங்கள் அம்மாவுடன் பேசிக்கொண்டு வர வசதியாக இருக்கும் அதனால் நான் ஓட்டுகிறேன்"
என்றாள் என் மனம் நெகிழ்ந்தது வீடு வந்தோம் தரையே காண முடியவில்லை எல்லாம் கார்பெட்தான். சேர்ந்து சாப்பிட்டவுடன் என் மகன் எல்லா பாத்திரங்களையும் எடுத்துப் போய் உள்ளே வைக்கப் போனவன் வரவேயில்லை. ரொம்ப நேரம் ஆனது
நான் மெள்ள கிச்சன் போய் பார்த்தேன் அவன் டிஷ் வாஷரில் பாத்திரங்களை போட்டுக் கொண்டும் மேடையெல்லாம் கையில் உறைமாட்டிக் கொண்டு சுத்தப் படுத்திக் கொண்டிருந்தான்.

என் மருமகள் வாசலில் grass cutting machine னால் கார்டெனய் சரி செய்து கொண்டிருந்தாள். நான் உள்ளே போய் "நகர்ந்து கொள், நான் அலம்புகிறேன்"என்றேன். அவன் "நீங்கள் ரெஸ்ட் எடுங்கள்" என்றான்
என் மனம் பதைத்தது ஒரு பெரிய கம்பெனியின் CEO இப்படி மேடை சுத்தப் படுத்துகிறானே என்று தோன்றியது என் மனது கேட்கவில்லை தாயின் மனம் ஆயிற்றே!
ஆனால் என் உணர்வுகளைப் புரிந்த்து கொண்டு அவன்

"அம்மா நாங்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து turn by turn ஆக செய்கிறோம். இன்று என்னுடயை டெர்ன் அதனால்
எங்களுக்குள் வேலை பளு ஏற்படுவதில்லை பதிலாக அன்பு அதிகமாகிறது"என்றான்.
நமது நாட்டில் கணவர் கையில் டம்ளர் தண்ணீருடன் கொடுத்து

அந்தப் பாத்திரத்தை வாங்கிப் போகும்வரை அந்த அம்மா அங்கேயே நின்று எடுத்துப் போவாள். அதில் ஒரு ஆனந்தத்தைக் கண்டிருக்கலாம் ஆனால், அந்த அப்பா சும்மா உட்கார்ந்திருந்தாலும். மனைவியை வேலைக்கு ஏவுவது ஞாயமாகப் படவில்லையே
மறு நாள் குழந்தைகளை குளிப்பாட்டி டிரெஸ் செய்வது என் மகனின் வேலை
பள்ளிக்கு சாப்பாடு தயார் செய்து கொடுப்பது மகள் வேலை. அவசரமாக தன் மகனுக்கு ப்ரெட்டை வாயில் கொடுத்துக் கொண்டிருந்தான் என் மகன்.
சரி எல்லாம் பார்க்க நன்றாகத்தான் இருந்தது ஆனால் என் மனம் பழைய சம்பவத்தில்
ஓடியது. என் மகன் பரீட்சையின் போது அவன் படிக்க நான் அவன் வாயில் ரொட்டி
தாலில் {dhal }தோய்த்து ஊட்டி விட்டது ஞாபகம் வந்தது.

அந்தப் பையன் இப்போது தன் பையனுக்கு அதே வேலை செய்கிறான் இதுதான் காலச் சக்கிரத்தின் சுழலோ
சனி ஞாயிறு அங்கு ஓய்வுதினம் தன் குடும்பத்தின் மகிழ்சிக்கென்றே ஒதுக்கப் பட்ட தினம். எல்லோரும் எங்கேயாவது ப்ளான் போட்டுக் கொண்டு காரில் கிள்ம்பிவிடுகின்றனர்
கையில் தின் பண்டங்கள் மற்ற சாப்பாட்டு பொருட்களுடன் பாட்டும் இசைய கிளம்பி விடுகிறார்கள். 5 நாட்கள் கடும் உழைப்புக்குப் பின் மூளைக்கு ரெஸ்ட் and relaxation
குடும்பத்திற்கும் நேரம் செலுத்துதல் அங்கு மிக முக்கியம். அவர்கள் குடும்பம் என்பது

கண்வன், மனைவி குழந்தைகள்தான் வெளியில் நடந்தால் கை கோர்த்து தோளுடன் தோள் சேர்த்து
நடப்பதைக் காணலாம் இதற்கு வயது வரம்பு இல்லை. எல்லா வயதினரையும் இதேபோல் பார்க்க நமது கலாசாரம்
நினவுக்கு வந்தது கண்வனுக்கும் மனைவிக்கும் {பழைய காலம் ]ஒரு 4 அடிகள் இடைவெளி
கண்டிப்பாக இருக்கும் என் குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன்
இந்தக் குடும்பத்தில் எல்லோரும் கையில் டென்னிஸ்ரேக்கெட் அல்லது table tennis bat and ball
swimming pool dress என்றுஎடுத்தும் போய் விடுகிறார்கள் திரும்பி வரும் போது மணி 8 ஆகி விடும் வழியிலேயே பிஸ்ஸா பெர்கர் போன்றது

வயிற்றுக்குள் போய் விடுவதால் வீட்டிற்கு வந்து ஒரு சினிமாவோ அல்லது இண்டோர் கேம்ஸோ விளயாடி விட்டு
அன்றைய பொழுது முடிகிறது
என்க்கு என்று பார்ட்டிகளும் நடந்தன. அதில் என்ன சிறப்பு என்றால் ஒரு சின்ன sandwich
செய்தாலே கணவன் fantastic என்று புகழ்ந்து தள்ளுகிறான் அதில் "எனக்கு எல்லாமே அவள்தான்" என்று கண் சிமிட்ட அவளைத்தட்டிக் கொடுக்கிறான். இதைப் பற்றி என்
மகனிடம் கேட்டேன். நாங்கள் இருவரும் ரொம்ப friends போல் பேசிக் கொள்வோம்.
"ஏன் ராஜா எல்லோரும் ஒரேபோல் சொல்லுகிறார்களே! உண்மையா போலியா என்று தெரியவில்லையே" என்றேன் வெளிநாட்டிற்கு வந்தாலே இது எல்லாம் வந்து விடும் போலிருக்கிறது என்று சிரித்தான்.
என் வெளியூர் பயணத்தில் பல நல்லவைகளையும், சில ஒதுக்கபடவேண்டியதாகவும் இருந்தன. பிறகு அவைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.


விசாலம்

No comments: