Sunday, April 1, 2007

ராம வம்சம்



ராமருடைய வம்சம் மிகவும் சிறந்தது. அவருடைய முன்னோர்கள் பல அரிய காரியங்களைச் செய்து சிறப்பு காரணப் பெயர்கள் கிடைக்கச் செய்தவர்கள். ஜனகமஹாராஜா சீதையின்
சுயம்வரம் முன் விசுவாமித்திர முனிவரிடம் ராமரைப் பற்றியும் அவர் வம்சத்தைப் பற்றியும்
கேட்டதில்

அவர் மரபுக் காரணப் பெருமைகளைக் கூறினார்.
மனுசக்கிரவர்த்தி நீதி வழுவாமல் அரசாட்சி செய்து தரும சாஸ்திரத்தில் சிறந்து விள்ங்கினார்.
அதுதான் மனு வம்சம் .
பிருகு சக்கிரவர்த்தி பாணம் போட்டு பூமியை செழிப்பாக்கி, பூமித்தாய் வளத்தை மலரச் செய்தவர். ராமனின் முன்னோர்
இஷ்வாகு மன்னன் ஸ்ரீரங்கநாதனைக் குலதெய்வமாகக் கொண்டு தான் என்ற பிரும்மாவின் அகந்தயை ஒழித்தவர் அதலால் ராமன் இஷ்வாகு குலத்தினன். காகுஸ்தன் என்ற மன்னன் இந்திரனுக்கு தேவ அசுரப் போரில் உதவி போர்களத்தில் எந்த வாகனமும் இல்லாததால் இந்திரனே வாகனமாகி காகுஸ்தனை சுமந்து நின்று உதவினான் காகுஸ்தன் போரில் வெற்றி பெற்று இந்திரனைக் காப்பாற்றினான். அதனால் ராமனுக்கு காகுஸ்தன் என்ற பெயரும் உண்டு.

தன் சதையை ஒரு புறாவுக்காக அரிந்துக் கொடுத்த சிபி சக்கிரவர்த்தியும் அந்த வம்சம்தான்.
அதனால் ராமனுக்கு செம்பியன் என்ற பெயரும் உண்டு.
கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனும் ராமனின் முன்னோர்கள்
இந்துமதி என்ற பேரழகி சும்வரத்தில் அஜன்

என்பவனுக்கு மாலையிட்டாள். பிற அரசர்களை எதிர்த்து அஜன் இந்துமதியை தனது தோளில் வைத்து தூக்கி வந்து மணந்தான்.

அந்த அஜனின் குமாரன் தான் தசரதன். தசரதனின் குமாரன் ராமன். அவன் வம்ச சிறப்பு மிகவும் தருமம், காருண்யம், வீரம்,சாந்தம் என்ற பல பெருமைகளைக் கொண்டது.

No comments: